>

இலக்குகள்

  • இலங்கையின் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துதல்.
  • தற்போதுள்ள போக்குவரத்து வலையமைப்பை நெறிப்படுத்துதல்.
  • போக்குவரத்து மீறல்களை குறைந்தபட்சமாக ஆக்குதல்.
  • கொழும்புக்கு 7 முக்கிய தாழ்வாரங்களில் போக்குரத்து நெறிசலை தணித்தல்.

செயற் திட்டம்

ஸ்மார்ட் போக்குவரத்து

  1. பொதுப் போக்குவரத்துக்கு ஒரு தொலைபேசி அப் இணைப் பயன்படுத்துதல், இதன் மூலம் பொது மக்கள் பேரூந்துகள் மற்றும் புகையிரதங்களின் சரியான நிலை இடங்களை அறியலாம்.
  2. பயணிகளுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களுக்கு இஸ்மார்ட் நேர மற்றும் வரிசை முகாமைத்துவ முறையை அமுல்படுத்துதல்.
  3. கிடைக்கக் கூடிய தரிப்பிடங்களில் குறித்த நிகழ் நேர தகவலுடன் ஒரு ஒன்லைன் தளத்தை வழங்கி ஒன்லைன் கட்டணம் செலுத்துபவருக்கு 10% தள்ளுபடியுடன் தரிப்பு கட்டணங்களை சேகரித்தல்.
  4. அல்ட்ரா உயர் விலக்க கெமராக்கள் மற்றும் செயலற்ற நேரத்தைக் குறைக்கும் மற்றும் ஓடுபாதை திறனை அதிகரிக்கும் ஒருங்கிணைந்த தரவுத் தளம் என்பவற்றை பயன்படுத்தி விமான நிலையங்களில் தரையிறங்கும் திறனை அதிகரித்தல்.
  5. வீதிக் கண்காணிப்பு மற்றும் போக்குவரத்துப் புகார்களை செய்வதற்கு ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல். வீதி ஒழுங்குகளை மீறியமைக்காக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்தியதற்காக அரசு வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்கள் மீதும் புகார் பதிவு செய்தல்.
  6. போக்குவரத்து வாகனங்களின் ஓட்டங்களுக்கு ஏற்ப போக்குவரத்து விளக்குகளை தானியக்கமாக்குவதற்கு இஸ்மார்ட் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துதல்.
  7. நேருக்கு நேர் விபத்துக்களின் மிக உயர்ந்த பதிவைக் கொண்ட புவியியல் சார் இடங்களுக்கு ஆலோசனை அறிகுறிகள் மற்றும் அறிவிப்புக்களுடன் கூடிய பொறியியல் தீர்வுகளை வழங்குதல்.
  8. கையடக்க முறைமைகள் மூலம் தளத்திலேயே தண்டம் செலுத்துவதற்கான நடைமுறைகள்.
  9. வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்பதை கண்காணிக்க விவேகமான போக்குவரத்து ஒளி மற்றும் வீதி கமராக்களை அறிமுகப்படுத்துதல்.
  10. அனைத்து இலத்திரனியல் போக்குவரத்து அப்லிகேஷன்களையும் ஒரே ஒரு கையடக்கத் தொலைப்பேசி அப் இல் அடக்குதல்
  11. பொது போக்குவரத்து கட்டண வசூலிப்பிற்காக இலத்திரனியல் முறைமையை அறிமுகப்படுத்துதல், இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான நாள் அல்லது வாரங்களுக்குரிய விசேட அனுமதியை வழங்குதல்.
  12. சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஒளிநாடாக்களை உருவாக்கி பதிவேற்றுதல்.

உட்கட்டமைப்பு

  1. மொரட்டுவ, கொட்டாவ, ராகம மற்றும் நீர்கொழும்பு ஆகிய புகையிரதங்களுடன் இணைப்புக்களைக் கொண்ட இலகுவான மற்றும் அதிவேக பேரூந்துக்களுடன் பல மாதிரி போக்குவரத்து முறையை செயற்படுத்தல்.
  2. பிலியந்தல, பத்தரமுல்ல மற்றும் கடவத்தயில் இலகுவான மற்றும் அதிவேக பேரூந்துக்களுடன் பல மாதிரி போக்குவரத்து முறையை செயற்படுத்தவும்.
  3. பல்-மாதிரி மையங்களில் இருந்து நகரத்திற்கு வரும் அனைத்து புதிய பேரூந்துகளும் ஊனமுற்றோர் அணுகலுடன் low-floor பேரூந்துகள் என்பதை உறுதிப்பத்தல்.
  4. கொழும்பின் முக்கிய 7 தாழ்வாரப் பகுதிகளில் (மொரட்டுவ, கொட்டாவ, ராகம, நீர்கொழும்பு,பிலியந்தல, பத்தரமுல்ல மற்றும் கடவத்த) மற்றும் பிற பகுதிகளில் போக்குவரத்து நெறிசல்களை தணிக்க சிறந்த பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் கொழும்பு அடிப்படையிலான அனைத்து வசதிகளுடனான கிளைகளும் கிடைப்பதை உறுதி செய்தல்.
  5. போக்குவரத்து நெறிசல் வெளிப்புறமாக இயக்கப்படும் என்பதால் உச்ச நேரங்களில் போக்குவரத்து நெறிசல்களைக் குறைக்க மத்திய கொழும்பில் 100,000 குடியிருப்புகள் கட்டுதல்.
  6. செலவுகள் மற்றும் பயண நேரத்தைக் குறைக்க அனைத்து சந்திப்புக்களிலும் வட்ட சுற்றுக்களில் போக்குவரத்து விளக்குகளை மாற்றுதல்.
  7. அனைத்து பாதசாரி குறுக்கு வெட்டுகளிலும் சரியான விளக்குகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்தல்.
  8. நெறிசலான குறுக்கு வெட்டுக்களில் மேம்பாலங்களை கட்டுதல்.
  9. ஒரு பிரதான பாதையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 1,400 கிராமங்களுக்கு சிறிய பஸ் சேவைகளை பயன்படுத்துதல்.
  10. இலத்திரனியல் வாகனங்களுக்காக 1,500 மின் ஏற்றி நிலையங்களை அமைத்தல்.
  11. ஒவ்வொரு மாவட்டங்களிலும் முன்மொழியப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மீன் சந்தைகளில் வீதி உட்கட்டமைப்பை விருத்தி செய்தல்.
  12. பொருட்களின் விரைவான இயக்கத்திற்கு தேசிய தளவாட வலையமைப்பை உருவாக்குதல்.
  13. சன நெறிசலான புகையிரத நிலையங்களை சிற்றுண்டிச் சாலைகள், சுத்தமான பொது கழிவறைகள் மற்றும் சௌகரியமான இருக்கைகள் போன்ற வசதிகளுடன் நவீனமயமாக்குதல்.
  14. அனைத்து புகையிரதக் கடவைகளிலும் எச்சரிக்கை சமிக்ஞைகள் மற்றும் வாயில்களை பொருத்துதல்.
  15. பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை 6 முதல் 15 ஆக உயர்த்தவும், அதிக தேவை உள்ள புகையிரத பயணிகளுக்கான இருக்கைகளை அதிகரித்தல்.
  16. ஆடம்பர சேவைகளுடன் நியமிக்கப்பட்ட சுற்றுலா புகையிரதங்களுக்கு பயிற்சியாளர்களை நிறுவுதல்.