இலக்குகள்.

உள்ளடக்கிய விவசாய மாற்றத்தை செயற்படுத்துதல்:

  • விவசாயிகளுக்கான விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
  • விவசாயிகளின் வீட்டு வருமானத்தை அதிகரித்தல்.
  • பாதுகாப்பான, மலிவான மற்றும் சத்தான ஓய்வு ஆண்டின் சமமான நுகர்வினை அதிகரித்தல்
  • விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல.

செயற் திட்டம்.

  1. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகித்தல்.

    தற்போது 35,000 கொள்கலன் உரமானது இறக்குமதி செய்யப்படுகின்றன. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகிப்பின் அறிமுகத்துடன் 20%(7,000 கொள்கலன்) இறக்குமதி குறைக்கப்பட முடியும்.

  2. தேவையான இயந்திரங்களை பயன்படுத்தி உள்நாட்டு அதிகாரிகளால் விவசாயிகளுக்கான ஆரம்ப நிலத் தயாரிப்புக்களை மேற்கொள்ளுதல்.
  3. விவசாயத்திற்கு ஆதரவளிக்கும் பொருட்டு நீர்ப்பாசண உட்கட்டமைப்பை செய்தல்.;
    • 2,400 குளங்களை புனர்நிர்மாணம் செய்து கொள்திறனை அதிகரித்தல்.
    • குள நீர்வீழ்ச்சி முறைமையை அடையாளம் கண்டு விருத்தி செய்தல்.
    • புனர்நிர்மாணம் செய்த நீர்ப்பாசண கிணறுகளை விருத்தி செய்தல்.
  4. தரமான விதைகள் மலிவான விலையில் சரியான நேரத்திற்கு கிடைப்பதை உறுதி செய்தல
  5. திரவ உரங்கள் மற்றும் கரிம விவசாயத்திற்கு மானியம் வழங்குதல்.
  6. வறட்சியான காலத்தில் விவசாயிகளின் வாழ்க்கைச் செலவை ஈடு செய்வதற்காக உர மானியத்தை பணமாக செலுத்துதல்.
  7. கரிம விவசாயத்தின் இலாபத்தை மேம்படுத்துவதற்கும் அதிகரிப்பதற்கும் ஒரு பிரத்தியேக E-commerce தளத்தினை உருவாக்குதல், இதன் மூலம் நுகர்வோருக்கு கரிம விளைபொருட்கள் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கலாம்.
  8. அறிவுபூர்வமான விவசாயத்தை அமுல்படுத்துதல்.;
    1. விவசாயியின் பயிர் விவரக் குறிப்பு மற்றும் கண்காணிப்பு.
    2. 7 நாட்கள் வானிலை முன்னறிவிப்பு
    3. காலநிலைப் பற்றிய முன்னறிவிப்பு மற்றும் காலநிலை இஸ்மார்ட் பாசன விவசாய நிகழ்ச்சி.
    4. ஊர்ப்பயன்பாடு பற்றிய பரிந்துரை.
    5. பயிர்நிலைக் கண்காணிப்பு
    6. புவியியல் அடையாப்படுத்தல் மற்றும் பகுதிகளை அடையாளம் காணுதல்.
    7. விவசாயிகளுக்கு பயிர்களின் குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் அளிக்க பகுதி ஆய்வுகள்.
    8. அறுவடைக் கண்காணிப்புக்கள்
    9. பூச்சிய அளவிலான நோய் மற்றும் ஆலோசனைகள் (சரியான நேரத்திலான பயிர் ஆலோசனை)
    10. நாற்று நிலைத் தொடக்கம் விற்பனை வரையான முடிவுக்கு முடிவை கண்டறிதல்.
    11. விவசாயிகளுக்கான பயிர் ஆலோசனை தொலைபேசி அப்லிகேஷன் பயன்பாடு.
    12. அறுவடையின் அளவை புரிந்துக் கொள்வதற்கு செயற்கை கோள் படங்கள் மூலம் இலங்கையின் பயிர்களின் முழுமையான வரைப்படத்தை பெறுதல்
    13. விநியோகஸ்தர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையில் அல்காரிதம் அடிப்படையிலான பொருத்தப்பாட்டை செய்தல்.
    14. நாடு முழுவதும் பயிர் விளைச்சலைக் கணிப்பதன் மூலமும் உகந்த தீர்வுகளை வழங்குவதன் மூலமும் விவசாய விரயத்தைக் குறைத்தல்.
  9. பயிர் நடும் பருவத்தின் தொடக்கத்திலும் மற்றும் மீதமுள்ள கட்டத்திலும் அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட உள்நாட்டில் வளர்க்கப்படும்; புதிய உற்பத்திகளுக்கும் தற்போதைய இறக்குமதி வரியின் 50% விதித்தல்.
  10. ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருளாதார மையத்தை கட்டுதல்.
  11. சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பயிர் அறுவடை பற்றி ஒளிநாடாக்களை யூடியூப் இல் பகிர்தல்..
  12. இணையத்தின் வழியாக பயிர் உற்பத்தி பற்றிய அன்றாட தகவல், உள் விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய விபரங்களை வழங்குதல்.
  13. உள்நாட்டு சந்தைப்படுத்தல் ஒளியலைகளை பயன்படுத்தல் மற்றும் விவசாய விளைப் பொருட்களின் நுகர்வினை ஊக்குவித்தல், மொத்த சந்தைகளை வலுப்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாய கூட்டுறவு சந்தைகளை உருவாக்குதல் மற்றும் ஒப்பந்த விவசாயத்தை மேம்படுத்துவதற்காக விளம்பர பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல்.
  14. மாவட்ட வாரியாக தேவைகளுக்கு ஏற்ப விவசாய விளைப் பொருட்களின் சேமிப்பிற்கு தேவையான தளவாட இணைப்புக்களை உறுதிப்படுத்த ஒரு தேசிய சேமிப்பக கட்டத்தை நிறுவுதல்.
  15. விவசாயக் அமுல்ப்படுத்தல்கள் வாடகைக்கு கிடைக்கும் தன்மையை ஊக்குவிப்பதற்கு தொலைப்பேசி அப்லிகேஷன் அடிப்படையிலான அமைப்பை ஆரம்பித்தல்.
  16. வழங்குகை மூலமாக, பத்து பெரிய அளவிலான கலப்பின தனிமைப்படுத்தப்பட்ட விதை தோட்டங்களை திறக்க தனியார் துறைக்கு உதவுதல்.;
    1. அரச பண்ணைகளுக்குச் சொந்தமான ஒரு மரத்திற்கு 120 தேங்காய்கள் தரக் கூடிய கலப்பின தேங்காய் விதைகள (DXT)
    2. செயற்கை மகரந்த சேர்க்கைக்கு பயிற்சியளித்தல்.

விவசாய ஏற்றுமதி

  1. விவசாய உற்பத்தி ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் கட்டுநாயக்க, பலாலி, திருகோணமலை, மட்டக்களப்பு, கொக்கல, மத்தள மற்றும் கண்டியில் திகன ஆகிய விமான நிலையங்களில் அனைத்து பொருட்கள் ஏற்றும் விமானங்களுக்கும் நிறுத்தி வைக்கும் வசதி மற்றும் விமானத்தை இறக்கும் வசதிகளை வழங்குதல்.
  2. திருகோணமலை, மட்டக்களப்பு, கொக்கல மற்றும் திகன(கண்டி) இலிருந்து பொருட்கள் ஏற்றும் விமான சேவைகள் சர்வதேசத்திற்கு செல்வதற்கு வசதிகள் செய்தல்.
  3. அனைத்து விவசாய உற்பத்திகளையும் குறைத்து, அனுமானிக்கக் கூடிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கையை அமுல்படுத்துதல்.
  4. துரியன் மற்றும் மா ஏற்றுமதிக்கான 300 பில்லியன் டொலர் இலக்கை அடைய பொது தனியார் கூட்டாண்மைகளை ஊக்குவித்தல், தனியார் துறைக்கு தாவரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குதல்.

    நூற்றுக்களை திறக்க மற்றும் தாவரங்களை விற்பனை செய்வதற்காக தாய்லாந்திலிருந்து துரியன் தாவரங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தல்.

  5. தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் இளம் இனிப்பு-தேங்காய் விதைகளை தனியார் துறைக்கு வழங்குதல், தனிமைப்படுத்தப்பட்ட விதை தோட்டங்களைத் திறந்து தாவரங்களைவ விற்க உதவுகிறது.
  6. வரிச்சலுகைகளை வழங்குவதன் மூலம் உள்ளுர் மற்றும் ஏற்றுமதி சந்தைக்கு மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களின் செயலாக்கத்தை ஊக்குவித்தல்.