இலக்குகள்

  • தற்போதுள்ள மற்றும் எதிர்கால பரம்பரைக்காக சுத்தமான பாதுகாப்பான, மற்றும் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்தல்.
  • இயற்கையின் ஆயள் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாத்தல்.
  • வாழக்கூடிய மற்றும் பிரியத்திற்குரிய இலங்கையை கட்டியெழுப்புதல்.

  • செயற் திட்டம்

    1. சுர்வதேச சூழற் குறியீடுகளில் இலங்கையின் தரத்தை மேம்படுத்துதல்.
    2. மறு சுழற்சி செய்வது குறித்து புத்தகங்கள் மற்றும் சூழல் குறித்து மேலும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் தேவை குறித்து மூன்று மொழிகளிலுமான ஒளிநாடாக்கள் மூலம் ஊக்குவித்தல்.
    3. 5 ஆண்டுகளில் 200 மில்லியன் மரங்களை நடவும். பொருத்தமான இடங்களில், தேசிய சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இனங்களில் 10 மில்லியன் மரங்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்காக 100 மில்லியன் மரங்கள் உட்பட காடு மீள்வளர்ப்புக்கு 100 மில்லியன் மரங்களை நடவும். இந்த முயற்சியின் மூலம், சிவப்பு பட்டியலிடப்பட்ட அனைத்து தாவர இனங்களையும் பாதுகாக்கவும்.
    4. உலக பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஒளிநாடாக்கள் மற்றும் மறுசுழற்சி புத்தகங்கள் மூலம் மாணவர்களுக்கு சூழல் உயர்ததிறன் மற்றும் பாதுகாப்பு குறித்து கற்பித்தல்.
    5. உயிரியல் பூங்காக்களுடன் இணைந்து அழிந்து வரும் உயிரினங்களுக்கான இனப்பெருக்க மையங்களை உருவாக்குதல்.
    6. 26 வன விலங்கு பூங்காக்களை மேம்படுத்துதல் (மொத்தம் 57,376 பரப்பளவில் ) மற்றும் உள்ளுர் வனவிலங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.;
      • வனவிலங்கு பூங்காக்களுக்குள் கூடுதல் வளங்களை உருவாக்குதல்.
      • இயற்கை வாழிடங்களை பாதுகாக்க வெறிச்சோடிய பகுதிகளில் மரங்களை நடுதல்.
      • வறட்சியின் போது விலங்குகளுக்கு குடிநீரை வழங்க சூரிய நீர்விசை இயக்க குழாய்களை நிறுவுதல்.
      • சத்தான புல் வகைகளை வளர்த்தல்.
      • தற்போதுள்ள பூங்காக்களின் வெளியேறும் இடத்திற்கு அருகாமையில் 200 ஏக்கர் புதிய நிலத்தில் வனவிலங்குகளுக்காக அறிமுகம் செய்தல் மற்றும் அவற்றிற்கு உயிர்வாழ்வதற்கு போதுமான அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்தல்.
    7. பயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத விலங்குகளை இணங்கண்டு இனப்பெருக்கம் செய்தல்.
    8. குப்பைகள் குவிந்து கிடக்கும் மற்றும் நுளம்புகள் வளரும் பிரதேசத்தை புவியியல் ரீதியாக இணங்கண்டு அவற்றின் படங்களை பொது மக்களுக்கு அனுப்பக் கூடிய ஒரு தளத்தை அறிமுகப்படுத்தல். ஒரு வருடத்திற்குள் நாட்டை சுத்தம் செய்வதற்கான பிரச்சாரத்தை இலங்கை இராணுவம் தொடங்குதல்.
    9. கால்வாய் தூய்மைப்படுத்தல்களை ஒழுங்கமைத்தல் மற்றும் நீர்முனை ஈர்ப்புக்கள், கால்வாய் பயணங்கள் போன்வற்றுக்கு ஏற்ற கால்வாய்களை இணங்காணுதல்.
    10. கார்பன் தரத்தினை குறைக்க GBI (பசுமை கட்டிடப் புரட்சி) அல்லது LEED(எரிசக்தி மற்றும் சூழல் வடிவமைப்பில் தலைமைத்துவம் ) போன்ற சான்றிதழ்களை வழங்குதல்.
    11. பாதிக்கப்பு மதிப்பீட்டை நடாத்துதல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் ஏற்றுக் கொள்ளத் தக்க திட்டத்தை தயாரித்தல்.
    12. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வசதியான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்துகளுடன் பொதுப் போக்குவரத்து முறையை நெறிப்படுத்துதல் (கொழும்பு இனிய சவாரி திட்டம்)
    13. ஆற்றலுடைய சிறந்த தெரு விளக்கு முறைமையை அறிமுகப்படுத்துதல்.
    14. நகராட்சி திடக் கழிவுகளை பராமரிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மின் நிலையங்களை அமைத்தல். பொது-தனியார் கூட்டாண்மை மூலம் கட்டுமானம் மேற்கொள்ளப்படல். இந்த மின் நிலையங்களுக்கு அரசு இயக்க கட்டணத்தை செலுத்தும்.

    கடற்கரைச் சூழல் பாதுகாப்பு

    1. கடற்கரை முகாமைத்துவ முறைமை.
      • கடற்கரையோரங்களின் உயர் அரிப்புப் பகுதிகள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறைகளை அடையாளம் காணுதல். எவ்வகையான கட்டமைப்புக்களை நிர்மாணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க குறித்த பகுதியின் விரிவான வரைப்படங்களை பெறுதல்.
      • இலங்கையில் 90% பவளப் பாறைகள் இறந்து விட்டன, எனவே ஹிக்கடுவை, கல்பிட்டி, சிலாவத்துறை, திருகோணமலையில் உள்ள புறா தீவு, மட்டக்களப்பிள் உள்ள கயங்Nணி போன்ற கடல் சரணாலயங்கள் பாசிக்குடா பவளப்பாறை என்பவற்றையும் பாதுகாக்க “பவளப் பாறை பணிக்குழுவை நிறுவுதல்”
    2. இந்த பவளப் பாறைகளை புதுபிக்ககும் வழிமுறைகள் குறித்து உள்ளுர் மீன்பிடி சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
      உ.ம். குறைந்த விலை பவள மறுசீரமைப்பு முறைகள்.

    பல்லுயிர்.

    1. உள்நாட்டு கவனம் செலுத்தல் பொருளாதார-சுற்றுலா மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் ஊடாக பல்லுயிரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.;
      • தேசிய பல்லுயிர் தகவல் தொடர்பு, கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு (ஊநுPயு) செயல் திட்டத்தை உருவாக்கி செயற்படுத்துதல்.
      • பொது உறுப்பினர்கள் பல்லுயிர் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம் குடிமக்களுக்கு அறிவியல் மூலம் விழிப்புணர்வூட்டுதல்.
      • சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு மற்றும் பிற பல்லுயிர் தொடர்பான முகவர்களின் வலைத்தங்கள் ஊடாக இருப்பை உறுதிப்படுத்தல்.
    2. இயற்கையை அடிப்படையாக கொண்ட செயற்பாடுகளில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.;
      • முன்பள்ளி முதல் உயர்க் கல்வி நிறுவனங்கள் வரை பொதுக் கல்வியின் அனைத்து மட்டங்களிலும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் முகாமையாளர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சியினை வலுப்படுத்துதல்.
      • இயற்கையை வெளிப்புற கற்றலின் மூலம் தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்துவதுடன் இயற்கை சங்கங்கள், பசுமை முகாம்கள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு உள்ளிட்ட இணை பாடத்திட்ட பள்ளி நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து பலப்படுத்துதல்.
      • இதுபோன்ற முகாம்கள் நாடு முழுவதும் எதிரொலிக்க இயற்கை முகாம்களுக்கான தரப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்குதல் அல்லது விருத்தி செய்தல்.
      • பல்லுயிர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பயிற்சிக்கு பொருத்தமான அமைப்புக்களுடன் இணைந்தவாறு இளைஞர் குழுக்களை இயக்குதல்.

    வெள்ள முகாமைத்துவம்.

    1. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை தடுக்க மழைக்காலங்களில் தொடர்ச்சியான நதி மற்றும் நதி-வாய் முகாமைத்துவம், பருவக்கால அகழ்வாராச்சி மற்றும் நிரப்புதல் ஆகியவற்றை செய்தல்.
    2. வெள்ளப்பெருக்கை தணிக்க இலங்கை கடற்படையின் பொறியிலாளர்களை நதி வாய் முகாமைத்துவ அதிகாரிகளாக நியமித்தல்.

    அனர்த்த முகாமைத்துவம்.

    1. தேசிய பேரிடர் அபாய சுயவிபர ஆய்வை நடாத்தி, பேரழிவுகள், பேரழிவு ஏற்படக் கூடிய பகுதிகள் மற்றும் தீவிரத்தன்மையின் அளவை அடையாளம் காணுதல்.
    2. மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் இயற்கை நிலச்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளின் தரவுத்தளத்தை பராமரித்து, எந்தெந்த பகுதிகள் அதிக ஆபத்தில் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள தொடர்ந்து அவந்நைக் கண்காணித்தல்.

    வறட்சி முகாமைத்துவம்.

    1. ஏற்பனவே காணப்படுகின்ற மற்றும் சாத்தியமான அபாயங்களைப் புரிந்து கொள்ள வறட்சி அபாய மதிப்பீட்டை மேந்கொள்ளுதல்.
    2. விவசாயிகள், ஆயர் சமூகம் மற்றும் கடற்கரையோர சமூகங்களுக்கான வேலைக்கான பணம் மற்றும் அவசர கால வாழ்வாதார தொகுப்புக்கள் மூலம் உணவு அணுகலை அதிகரித்தல் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களை பாதுகாத்தல்.
    3. நீர்த் தெளிப்பு, சொட்டு நீர்ப் பாசண முறைமை போன்ற நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்குதல்.
    4. சேமிப்பகத்தை உருவாக்கி, பற்றாக்குறை காணப்படும் பிராந்தியங்களுக்கு நீர் பரிமாற்றத்தை இயலச் செய்தல், எனவே அதிக மற்றும் சமமான விநியோகம் மற்றும் நீர்வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தவதற்கான ஒரு தெரிவாக இருத்தல்.
    5. கூடுதலான கால்நடை உணவு, நீர் ஊடுகை, நீரினை சிறு நீர்ப் பைகளைக் கொண்டு வழங்குதல் மற்றும் நாடு தழுவிய சிகிச்சை மூலம் கால் நடைகளை பாதுகாத்தல்.
    6. கால்நடை பொருட்களை வழங்குதல், நதிக் கரையை பழுதுப் பார்த்தல் மற்றும் உணவுச் சங்கிலி அச்சுறுத்தலுக்கு எதிராக உள்ளுர் தயாரிப்புக்களை வலுப்படுத்துவதன் மூலம் புதிய ஆபத்துக்களை தணித்தல்.
    7. முhற்றுப் பயிர்கள் / பயிர் வகைகள் / சிறப்பான விவசாய நடைமுறைகள் / வறட்சி சூழ்நிலைக்குப் பொருத்தமான பிற முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் நடுகை உள்ளிட்ட மாவட்ட தற்செயல் திட்டத்தை அறிமுகப்படுத்துதல். .
    8. நீர் முகாமைத்துவ முறைமைகளை பின்பற்றும் கட்டுமானத் திட்டங்களுக்கு வரி சலுகைகளை வழங்குவதன் மூலம் பிராந்திய சுய நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைந்த நீர் நிர்வாகத்தை அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் அதிகரித்தல்.
    9. நிலையான மறுசுழற்சி விதிமுறைகளை பின்பற்றி மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்பாட்டை அதிகரித்தல்.
    10. சீரழிந்த நீரோடைகள், நீர்வழிகள் மற்றும் ஈரநிலங்கள் போன்ற முக்கியமான சுற்றுச் சூழல் அமைப்புக்களைப் பாதுகாத்து மீட்டெடுங்கள்.
    11. சூழல் ரீதியாக சிறந்த வன நிர்வாகத்துடன் வன ஆரோக்கியத்தை மீட்டெடுத்தல்.

    வனவிலங்குப் பூங்காக்கள்.

    1. மனித-யானை முரண்பாட்டிற்கான தீர்வுகள்.

      வறண்ட வலயத்தில் தான் பெரும்பாலான மனித-யானை முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்கப்படுகின்றன. சராரரியாக, வருடாந்தம் 70 மனித மற்றும் 250 யானைகளின் உயிர்கள் மனித-யானை முரண்பாட்டினால் இழக்கப்படுகின்றன. கடந்த 70 வருடங்களாக வன விலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தால் இடப்படும் காணிகளுக்கான வேலிகளின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டு இருக்கிறார்கள். எவ்வாறாயினும், மனித-யானை முரண்பாட்டின் அதிகரிப்பானது குறித்த தடுப்பு முறையின் வீரியமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. ஏனென்றால், யானைகளின் மொத்த தொகையில் 30% மாத்திரமே வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. மீதி 70% வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நிலத்தில் வாழுகின்றன.

      முனித-யானை முரண்பாட்டிற்கு உள்ளாகும் கிராமங்களை சுற்றி வேலிகளை அமைத்தல் (இது 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வினைத்திறனற்ற முறை என நிரூபிக்கப்பட்டுள்ளது). உயிரியல் வேலிகளை அமைத்தல், சென்சார் மூலம் இயங்கும் மெய்நிகர் வேலிகளை அறிமுகப்படுத்துதல் என்பன மனித-யானை மோதலைத் தடுக்கும் பொருட்டு ஊடுருவலை ஏற்படுத்தி யானைகளை எச்சரிக்கின்றன. ஏனெனில், மின்சார வேலியிடல் காரணமாக யானைகளில் மின்சாரம் பாய்ந்த பல சம்பவங்கள் காணப்படுகின்றன.

      மின்சார வேலியின் இரு புறமும் யானைகளைக் கொண்ட பகுதிகளை அடையாளம் காண இலங்கை விமானப் படை கூகில் அடைவிடம் மூலமாக காணப்படுகின்ற மின்சார வேலிகளை புவியியல் ரீதியாக அடையாளம் காணுதல்.

    2. வறட்சிக் காலங்களில் காட்டு விலங்குகளி;ன இறப்பு விகிதத்தை குறைக்க மொத்தம் 573,376 ஹெக்டேயர் பரப்பளவில் தற்போதுள்ள 26 வனவிலங்கு பூங்காக்களின் விளிம்பு திட்டங்களை பெறுவதன் மூலம் விலங்குகளுக்கான ஒளியலைகள், நீர்த் தொட்டிகள் மற்றும் குடி நீர் வசதிகளை மேம்படுத்துதல்.
    3. அனைத்து வனவிலங்கு பூங்காக்களிலும் காயமடைந்த விலங்குகளுக்கான மறுவாழ்வு மையங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.
    4. வேட்டைக்காரர்களி;ன் அத்து மீறல் மற்றும் வேட்டைக்காரர்களை கண்காணிக்க மற்றும் பிடிக்க வனவிலங்கு பூங்காக்களில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை முறைமைப்படுத்துதல்.
    5. வனத்துறை அதிகாரிகள் தங்கள் தேவைகளை வெளிப்படுத்த பின்னூட்டன் கணக்கெடுப்பை நடாத்துதல்.
    6. சாலைகளுக்கு வெளியே பரீட்சயமான ஒழுங்கைகளை ஒதுக்குதல்.
    7. வனவிலங்கு பூங்காவைப் பார்வையிடுவதற்கு தரப்படுத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்துதல்.
    8. சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சபாரி வாகனத்தை வாங்குவதற்கு நிதி உதவி வழங்குதல்.
    9. சபாரி வழிகாட்டிகளை பெயரிட்டு அவர்களுக்கு ஒளிநாடாக்கள் மூலம் பயிற்சியளித்தல்.
    10. சபாரி தொகுப்புகளை பற்றிய ஊக்குவிப்பினை வழங்குவதுடன் ஒன்லைன் மூலமாக டிக்கெட்டுகளை வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தல்.
    11. ஓவ்வொரு பூங்காவிற்கும் தனித்துவமான அனுபவங்களை நிறுவி அவற்றின் சந்தைப்படுத்தலுக்கு மையமாக்குதல்.
    12. வனவிலங்கு பூங்காக்களில் மோட்டார் பாதைகள் மற்றும் நுழைவு அறிகுறிகளில் விளம்பரத் தன்மை மற்றும் காணும் நிலையை அதிகப்படுத்துதல்.
    13. ஒருங்கிணைக்கப்பட்ட திறந்த உணவகங்கள் மற்றும் சில்லறை வியாபார இடங்கள் மூலமாக பார்வையாளர் மையங்களை மேம்படுத்தல்.
    14. கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட கல்வித் தொகுப்பை உருவாக்குதல்.