இலக்குகள்

  • தரமான வாழ்க்கையுடன் கூடிய வெற்றிகரமான மாவட்டங்களை உருவாக்குதல்.
  • ஒவ்வொரு மாவட்டத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் ஊக்குவித்தல்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்க அலுவலகத்தின் கிளைகளை திறப்பதன் மூலம் கொழும்பிற்கு மட்டுமே தடை செய்யப்பட்ட சேவைகள் மற்றும் வசதிகளை விரிவுபடுத்துதல்.

  • மாவட்ட அபிவிருத்தி

    தரமான வாழ்க்கை மற்றும் வெற்றிகரமான மாவட்டங்களை உருவாக்குவதற்கு மூன்று பிரதான பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்:

    1. கொழும்பிலிருந்து குறித்த மாவட்டத்திற்குள்ள தூரம்.
    2. ஒவ்வொரு மாவட்டத்திற்கான தனித்தன்மையான பிரச்சினைகள்.
      • கலாச்சாரம்
      • மொழி
      • உட்கட்டமைப்பு
    3. “மாகாண அரசியல் அதிகாரத்தின் பகிர்வு”?

    பிரச்சினை 1: கொழும்பிலிருந்து குறித்த மாவட்டத்திற்குள்ள தூரம்.

    தீர்வு : ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் பல்தரப்பட்ட சேவைகளை வழங்குதல்.

    கொழும்பிற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் வசதிகளை கொண்ட அரச அலுவலகங்களின் முழுமையான கிளைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் திறப்பதன் மூலம் அதன் சேவையை விரிவுப்படுத்துதல்.

    “மாவட்ட பல் சேவைகள் மையம்” ஒன்றினை நிறுவி பின்வரும் சேவைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் இலகுவாக வழங்குதல்:

    • கடவுச் நீட்டு வழங்குதல் உட்பட குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் அனைத்து சேவைகளும்.
    • தேசிய அடையாள அட்டை விநியோகம் உள்ளடங்களாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும்.
    • சாரதி அனுமதிப்ப பத்திரம் வழங்குதல் மற்றும் வாகனங்கள் பதிவு செய்தல் உள்ளடங்களாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து சேவைகளும்.
    • வெளிநாட்டு தூதரக சேவைகள் உள்ளடங்களாக வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும்.
    • வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனைத்து சேவைகளும்.
    • தற்போது கொழும்பிலிருந்து மாத்திரமே விநியோகிக்கப்படும் காவல் துறை மற்றும் தடவியல் அறிக்கைகள் உட்பட காவல் துறை திணைக்களத்தினால் செய்யப்படும் அனைத்து சேவைகளும்.
    • EPF இ ETF மற்றும் ஏனைய நிதி பெறுகைகள் உட்பட தொழிலாளர் திணைக்களத்தினால் ஆற்றப்படும் அனைத்து சேவைகளும்.
    • பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சினால் செய்யப்படும் அனைத்து சேவைகளும்.
    • சட்ட மற்றும் நீதித் துறையினால் செய்யப்படும் அனைத்து சேவைகளும்.
      • குடிமக்களால் ஏற்படும் செலவுகளை திருப்பி செலுத்ததல்.

        இரண்டு வருடங்களுக்குள் குறித்த சேவையை வழங்குவதற்கு குறித்த அரச திணைக்களம் அல்லது உத்தியோகத்தர் ஏதேனும் காரணத்திற்காக தாமதம் செய்திருந்தாலோ அல்லது சேவையை பூர்த்தி செய்யாதிருந்தாலோ, அதன் மூலம் பாதிப்பிற்குள்ளாகிய குடிமகனின் போக்குவரத்து செலவுகள் கணக்கிடப்பட்டு பொருத்தமான அரசாங்க நிறுவனத்தால் நஷ்ட ஈடாக செலுத்தப்பட வேண்டும்.

    பிரச்சினை 2 : ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உரிய தனித்தன்மையான கலாச்சார,மொழி மற்றும் உட்கட்டமைப்பு.

    1. கலாச்சாரம்

    உ.ம். யாழ்ப்பாண மாவட்டம்:

    தலையில் பூ அணிந்து செல்லும் மோட்டார் சைக்கில் ஓட்டும் பெண் சாரதிகள், மணிக்கு 30 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படுவர். இது தற்போது ஆபத்தான வாகன ஓட்டுதலாக இணங்காணப்படுகிறது.

    மணிக்கு 30 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் மோட்டார் சைக்கிலில் பயணிக்கும் போது காலாசார உடையான புடவை அணிந்த பெண்கள் கால்கள் இரண்டையும் ஒரே பக்கம் வைத்து பயணித்தல் என்பதற்கு பயங்கர ஓட்டுனர் சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.

    சமூகத்தின் நலன் கருதி இவ்வாறான பிரச்சினைகளை இணங்கண்டு அதற்கு பொருத்தமான தீர்வுகளை கொடுத்தல்.

    2. மொழி

    உ.ம்.யாழ்ப்பாணம் மாவட்டம்:

    முன்மொழியப்பட்ட “Home Police Programme” ஆனது பொலிஸ் அதிகாரிகளை அவர்களது சொந்த பிராந்தியங்களுக்குள் பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் திறமான தகவல் தொடர்பாடலுக்கு உதவுகிறது (உ.ம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியை யாழப்பான பொலிஸ் நிலையத்தில் பணிக்கமர்த்தல் ). இது மொழி ரீதியான சுமையை குறைப்பதுடன் வாசலுக்கு வாசல் திறமான பொலிஸ் சேவையினை வழங்க உதவுகிறது. இத்திட்டமானது 4,960 பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதுடன் (ஒரு நிலையத்திற்கு 10 அதிகாரிகள் வீதம் நாடு முழுதும் காணப்படும் 496 பொலிஸ் நிலையங்கள்) ஒரு நிலையத்திற்கு 5 மோட்டார் சைக்கிள் வீதம் வழங்கப்படும்.

    வருடாந்தம் 1,700 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவதுடன் அவர்களை “ர்ழஅந Pழடiஉந Pசழபசயஅஅந” இற்காக இணைத்துக் கொள்ள முடியும், மற்றும் இந்த செயன் முறையானது 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும். “ர்ழஅந Pழடiஉந Pசழபசயஅஅந”’ இன் விளைவாக மொழி சுமை குறைக்கப்படும்.

    மேலதிகமாக, மொழி பெயர்ப்பிற்காக (சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இடையில்) அரசாங்கத்தின் முயற்சியால் ஆன இலவசமாக அணுகக் கூடிய தளத்தை அறிமுகம் செய்தல். முடிமக்களின் பாவனைக்காக குறித்த தளத்தை ஒளிநாடாக்கள் மூலம் பெயரிட்டு சந்தைப்படுத்துதல்.

    புரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ளவும் பொருட்டு பல்வேறு இனத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி கல்வியை அனுமதித்தல். எனவே, ஆங்கிலமானது இலங்கையின் தொடர்பு மொழியாக அடையாளங்காணப்படும்.

    உ.ம். சிங்கள மாணவர்கள் தமிழ் கற்கும் காலத்தில் ஆங்கிலம் கற்பதை ஒரு தெரிவாக வழங்குதல். அதே போல் தமிழ் மாணவர்கள் சிங்களம் கற்கும் காலத்தில் ஆங்கில மொழி கற்பதை ஒரு தெரிவாக வழங்குதல்.

    3. குறைந்த உட்கட்டமைப்பு

    கொழும்பிற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரிவு படுத்ததல்.

    செயற் திட்டம்.

    1. மாவட்டத்தை முத்திரையிடல்.

      • ஒவ்வொரு மாவட்டத்தையும் அதன் சுற்றுலாத் தளங்கள், வரலாற்றுத் தளங்கள், தாவரவியல் பூங்காக்கள் போன்ற அடையாளங்களைக் கொண்டு முத்திரை குத்துதல்.
    2. பொதுக் கல்வி – மாகாண சபைக்கு கீழுள்ள 771 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளின் தரத்திற்கு ஒப்பாக அனைத்து வசதிகளுடனும் அபிவிருத்தி செய்தல்.

      • 276 பிரதேச சபைகளில் இருந்தும் 2 பாடசாலைகள் வீதம் (552 பாடசாலைகள்)
      • 41 நகர சபைகளில் இருந்து 3 பாடசாலைகள் வீதம் (123 பாடசாலைகள்)
      • 24 மாநகர சபைகளில் இருந்து 4 பாடசாலைகள் வீதம் (96 பாடசாலைகள்)

        மாணவர்களின் தொகையை 1,500 ஆல் அதிகரிப்பதற்கு போதுமான இட வசதிக் காணப்படும் பாடசாலைகளை தெரிவு செய்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை செய்தல். அதன் விளைவாக, இந்த 771 பாடசாலைகளிலும் சராசரியாக 1,500 மாணவர்கள் இணைத்துக் கொள்வதற்கான இட வசதி அதிகரிப்பதுடன் இது 1,156,500 மொத்த மாணவர்; தொகையாக உயரும்.

      • இதன் விளைவாக, தரம் 1 இற்கான அனுமதியை பெறுவதற்கான போட்டியானது 80,000 இலிருந்து 0 ஆக குறைக்கப்படும்.

    3. தனியார் கல்வி - வெளிநாட்டிற்கு சேவை செய்யும் தொழில்த் தகைமையுடையோர்களை ஊக்குவிக்கும் முகமாக சர்வதேச பாடசாலைகளை நிறுவுவதனை ஊக்குவிக்கும் பொருட்டு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT என்பவற்றை ஆரம்பித்தல்.

      தற்போது, ஆங்கிலம் பேசக் கூடிய தொழில் தகைமையுடையோர் நமது நாட்டில் ஆங்கில மொழி மூலமான பாடசாலைகளின் குறைபாடு காணப்படுவதால் தனது பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் சேவை செய்கின்றனர்.

      • வருடத்தின் மொத்த மாணவர்களில் 50% ஆனோரை பட்டதாரிகளாக்கும் இலக்கை அடைந்து கொள்ளும் பொருட்டு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT போன்ற சலுகைகளை கொடுப்பதன் மூலம் மருத்துவக் கல்லூரிகள் தவிர்ந்த தனியார் பல்கலைக்கழங்களை நிறுவுவதற்கு ஊக்கமளித்தல்.
      • வருடாந்தம் 360,000 மாணவர்களில் 40% மாணவர்களை உள்ளடக்கும் வகையில் வருடாந்த TVET சான்றிதழ் பெறுனர்களின் எண்ணிக்கையை 79,200 இலிருந்து 144,000 ஆக அதிகரிக்கும் பொருட்டு தகுதி வாய்ந்த விரிவுரையாளர்களுடன் கூடிய அனைத்து NVQ தர சான்றிதழ்களுடனான முழுமையாக வசதிப்படுத்தப்பட்ட TVET நிலையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்தல்.
    4. போக்குவரத்து, நீர், கழிவுநீர் பராமரிப்பு, பகல் நேர பிள்ளை பராமரிப்பு, முன் பள்ளி, பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் சுகாதார வசதிகளுடன் கூடிய மாவட்டங்கிள்ன மையப்படுத்தப்பட்ட வசதிகளுடனான குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய அடுக்கு மாடிக் கட்டிடங்களை முன்மொழிதல்.
    5. புதிய வேலைவய்ப்புக்களைக் கொண்டு வரும் புதிய வணிகங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த வாடகையுடன் கூடிய அகலமான அலுவலக வளாகங்களை முன்மொழிதல் மற்றும் EPF/ETF உடன் ஆரம்பப் பதிவு செய்யும் 70 வயது ஊழியருக்கு 70 சதுர அடி ஒதுக்குதல்.
    6. ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருளாதார மத்திய நிலையத்தை நிறுவுதல்.
    7. கடற்கரையோர பிரதேசங்களைக் கொண்ட 14 மாவட்டங்களில் மொத்த வியாபாரத்திற்கான மீன் சந்தை மற்றும் சேமிப்பகத்தை கட்டுதல்.
    8. மீன் பிடிக்கும் கிராமங்களுக்கு நடமாடும் குளிர் சேமிப்பகத்தை வழங்குதல்.
    9. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நீர் விநியோகம் மற்றும் சுகாதார சீர்த்திருத்தங்களை ஆரம்பித்தல்.
    10. மாவட்ட ரீதியாக வேலைவாய்ப்பு உருவாக்கம்.

      • தனியார்த் துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஒவ்வொரு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பொறுப்பு எடுக்க வேண்டும். இது மாதாந்தம் கண்காணிக்கப்பட வேண்டும்.
      • கொழும்பைத் தவிர வேறு மாவட்டங்களில் BOI உடனான உடன்படிக்கையிலான தனியார் துறை வியாபார முயற்சிகளுக்கு 80% கூட்டிணைக்கப்பட்ட வரி குறைப்பானது அடுத்த 25 வருடங்களுக்கு உத்தரவாதமளிக்கப்படும்.
      • 380,000 வேலையற்ற குடிமக்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு அவர்களது திறனுக்கு ஏற்றாற் போல் தனியார் துறைகளில் கிடைக்கக் கூடியதாக காணப்படும் வேலைகளில் இணைத்துக் கொள்ளுதல். வேலை வாய்ப்புச் சந்தையில் காணப்படும் கேள்விக்கு ஏற்றாற் போல் அவர்களது திறனை அதிகரித்தல்.
    11. உடல் ஆரோக்கியம்
      • ஒரு மாத கால காத்திருப்பு வரிசைகளின் பின்னிணைப்பைக் கொண்ட அரச அறுவை சிகிச்சை அரங்குகளில் ஒரு நாளைக்கு 8 முதல் 12 வரையான காலத்தை செயற்பாட்டு நேரமாக அதிகரித்தல்.
      • மகரகம புற்றுநோய் வைத்தியசாலையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வைத்தியசாலையில் புற்றுநோயியல் அங்கத்தை நிறுவுதல்.
      • ஓவ்வொரு மாவட்டத்திலும் நவீன மற்றும் முழுமையாக உபகரணங்களால் ஆன ஆய்வுகூடத்தை நிறுவுதல்.
      • கொழுபில் காணப்படும் அந்தந்த சிறப்பு மருத்துவ மனைகளுடன் இணைந்து இதயம், நுரையீரல், நரம்பியல், கண் மருத்துவம் மற்றும் குழந்தைகளின் நோய்களுக்கான முழுமையான உபகரணங்களை கொண்ட நிலையங்களை கட்டுதல்.
      • நாட்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு, சரியான வடிகட்டல் வசதியுடன் ஆழமான கிணறுகளை உருவாக்கும் பொருட்டு சிறுநீரக நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை புவியியல் ரீதியாக இணங்காணுதல். ஏற்கனவே குறிப்பிடத்தக்க கிராமங்களில் அவ்வாறான வடிகட்டல் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

        e.g. உ.ம். Hayleys PLC ஆல் செய்யப்பட்ட சாட்டியாவர திட்டம்.

      • மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகித்தல்.

        தற்போது 35,000 கொள்கலன் உரமானது இறக்குமதி செய்யப்படுகின்றன. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகிப்பின் அறிமுகத்துடன் 20%(7,000 கொள்கலன்) இறக்குமதி குறைக்கப்பட முடியும்.

      • 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT அறிமுகத்தின் கீழ் தனியார் வைத்தியசாலைகள் நிறுவப்படுதலை ஊக்குவித்தல்.
        • பொது சேவை உத்தியோகத்தர்களுக்கு மேலதிக காப்புறுதி திட்டத்தின் படி மருத்துவ பராமரிப்பினை வழங்குதல்.
        • சத்திர சிகிச்சைக்காக மாதக்கணக்கில் வரிசையில் இருக்கும் நோயாளிகள் இந்த புதிய தனியார் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுவர்.
    12. உள்நாட்டு மற்றும் செளிநாட்டு முதலீட்டாளர்களை முதலீட்டு செயன் முறையில் வேகத்தை அதிகரிப்பதற்காக ளுஅயசவ ஐவு பூங்கா மற்றும் தொழில்துறை பூங்கா என்பவற்றை விருத்தி செய்தல்.