இலக்குகள்

To increase GDP per capita from

USD 4,000 to USD 12,000

Sதற்போது இலங்கையில்
(மாணவர்களுக்கான சதவிகிதம் 19 – 23 வருட)
2020 – 2025 இற்கான இலக்கு
மாணவர்ச் சேர்க்கை)
தடவைகளின் அதிகரிப்பு அல்லது குறைப்பு இலக்கை அடைவதற்கு
அரசாங்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 7% 25,200 16.67% 60,000 அதிகரிப்பு 2.38 தடவைகளால்
உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 4.1% 15,000 29.23% 105,228 அதிகரிப்பு 7.1 தடவைகளால்
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை. 4.1% 15,000 4.1% 15,000
தொழில் பயிற்சி நெறியை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை (2017) 22% 79,200 40% 144,000 அதிகரிப்பு 1.8 தடவைகளால்
வேலைப் படையணிக்காக பயிற்றப்படாத வேலையாட்களின் பங்களிப்பு (வீட்டு வேலையாள், நாட் கூலி போன்றன) 62.8% 225,600 10% 36,000 குறைப்பு 6.28 தடவைகளால்
வருடாந்த மாணவர்கள். 360,000 360,000
  • சான்றிதழ் பெறுனர்களின் எண்ணிக்கையை 79,200 இலிருந்து 144,000 ஆன அதிகரித்தல், இது வருடாந்த மாணவர் எண்ணிக்கையான 360,000 இல் 40% ஆகும்.
  • தற்போதுக் காணப்படும் பயிற்றப்படாத தொழிலாளர் எண்ணிக்கையை 225,600 ஆக குறைப்பதன் ஊடாக பயிற்றப்படாத தொழிலாளர்களை பயிற்றப்பட்ட தொழிலாளர்களாக்குதல். உ.ம் வருடாந்த மொத்த மாணவர்களில் 62.8% இனை 10% ஆக்குதல்.
  • மாணவர்கள் மற்றும் வயது வந்த கற்பவர்களுக்கும் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்நாள் கற்றலுக்கான திறன்கள், அறிவு மற்றும் மதிப்புக்களை பெறுவதந்கான வாய்ப்புக்களை உருவாக்குதல்.
  • பயிற்சித் தரங்கள், திறன்களின் பயிற்சி மற்றும் சான்றிதழ் அளிப்பு முறைமைகளை தொடர்ச்சியாக திருத்தி விருத்தி செய்தல்.

செயற் திட்டம்

  1. பிரத்தியேக பெயருக்கான வழிக்காட்டுதல்களை வழங்குவதன் மூலம் TVET இனை கவர்ச்சிகரமான கற்றல் தேர்வாக மறுப் பெயரிடுதல்.
  2. தொழில் வல்லுனர்களை பாடத்திட்டத்தினை நடாத்துவதற்கு இயலச் செய்வதன் மூலம் பட்டதாரி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களின் தரத்தை அதிகரித்தல்.
  3. 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT இனை TVET கல்விக்கு அமுல்படுத்துதல்.
    கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் VAT விகிதங்கள் என்பன அடுத்த 25 வருடங்களுக்கு தனியார் TVET பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு உத்தவாதமளிக்கிறது.
  4. வேலைவாய்ப்பு சந்தையில் கேள்வியாக காணப்படும் இந்தியா,ஜேர்மனி மற்றும் மலோசியாவில் கிடைக்கக் கூடிய புதிய TVET கற்கைகளை அறிமுகம் செய்தல்.
  5. வருடாந்தம் 360,000 மாணவர்களில் 40% மாணவர்களை உள்ளடக்கும் வகையில் வருடாந்த TVET சான்றிதழ் பெறுனர்களின் எண்ணிக்கையை 79,200 இலிருந்து 144,000 ஆக அதிகரிக்கும் பொருட்டு தகுதி வாய்ந்த விரிவுரையாளர்களுடன் கூடிய அனைத்து NVQ தர சான்றிதழ்களுடனான முழுமையாக வசதிப்படுத்தப்பட்ட TVET நிலையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்தல்.
  6. உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து தற்போது காணப்படுகின்ற தொழில்நுட்ப கல்வியினை மேம்படுத்துதல்.
  7. 4 மணித்தியாலங்கள், 6 மணித்தியாலங்கள், 12 மணித்தியாலங்கள், 20 மணித்தியாலங்கள், ஒரு நாள், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதம் போன்ற கால எல்லைக்குரிய சிறிய கற்கைகளை TVET பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்தல்.
  8. வேலை வாய்ப்புச் சந்தையில் கேள்வி அதிகம் உள்ள தளவாடங்கள் பிரிவில் சமையல் கற்கைகளை TVET மேலதிகமாக அறிமுகம் செய்தல்.
  9. பெண்களுக்கான TVET கற்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
    • முகாமைத்துவம், கணினி செயலாக்கம், நிகழ்ச்சித் திட்ட உதவி, சுற்றுலா மற்றும் பிரயாண உதவி போன்ற கற்கைகள்.
    • மேலதிகமாக, கூந்தல் பராமரிப்பு, முக அழகு, நகக் கலை மற்றும் தையல் போன்ற சிறிய கால எல்லைக்கான கற்கைகளை (1 தொடக்கம் 2 வாரங்கள் ) அறிமுகம் செய்தல்.
  10. TVET பயிற்சியாளர்களது திறமையை அதிகரிப்பதற்கு ‘பயிற்சியாளரை பயிற்றுவித்தல்’ கற்கை அறிமுகம் செய்தல்.
  11. அனைத்து குடிமக்களுக்கும் ஒன்லைன் மொழிக் கற்கைகள் இலவசமாக கிடைப்பதை உறுதிப்படுத்தல்.
  12. தனி நபருக்கு அவர்களது திறன்களை மதிப்பீடு செய்யவும் முன்னேற்றம் செய்ய வேண்டிய பகுதிகளை இணங்காண்வதற்கும் ஒன்லைன் திறன் மதிப்பீட்டு முறைமையை அறிமுகம் செய்தல்.
  13. வேலையில்லாத குடிமக்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு அவர்களது திறன்களுக்கு ஏற்றாற் போல் வேலை வங்கியினை அறிமுகப்படுத்தி வேலைகளுக்கு அவர்களை சேர்த்து விடுதல். இது புதிய மாணவர்களை வேலைக்கமர்த்தும் வரை கண்காணிக்கும்.
  14. மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான அர்ப்பணிப்பான திட்டத்தை ஆரம்பித்தல்.
    • சுற்றுலாத் துறை தொடர்பான வேலைவாய்ப்பு.
      சுற்றுலா வழிகாட்டல் கற்கை, சில்லறை, வீட்டிலிருந்து உணவு விடுதி செயலாக்கம், கடற்கரை கிளப் செயலாக்கம், பார் அட்டென்டர், வைட்டர்ஸ், வரவேற்பாளர்கள் போன்றன.
    • ஒன்லைன் விருந்தோம்பல் கற்கைகளின் ஊடாக விடுதிகளில் வேலை வாய்ப்பை உருவாக்குதல்.
    • வீட்டிலிருந்தான உணவு விடுதி செயலாக்கத்திற்கான பயிற்சி ஒளி நாடாக்கள்.
    • தாதியர் பயிற்சி கற்கைகள்.
    • கைத்தறி, பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றைப் பற்றிய கற்கைகளை நடத்த நிதி வழங்குதல்
  15. TVET மாணவர்களுக்காக பின்வரும் தகவல்களுடன் கூடிய அர்ப்பணிப்பான வலைத்தளத்தை நிறுவுதல்.
    • பிரதேசத்தில் கிடைக்கக் கூடிய தொழில்நுட்ப கல்லூரிகள்
    • இடவமைவை அடிப்படையாக கொண்ட கற்கைகள்
    • தொழில் வழிகாட்டல்.
    • பிரதேசத்தில் காணப்படும் தொழில் கிடைக்கும் தன்மை.
    • வீடியோ அடிப்படையிலான TVET கற்கை முறை.
    • சீர்ப்படுத்தும் உதவிக் குறிப்புக்களுடனான வீடியோ அடிப்படையிலான தனிப்பட்ட மற்றும் மென்மையான திறன் மேம்பாடு.
  16. தாதியர் கல்லூரிக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.