இலக்குகள்

  • மீனவருக்கான இரட்டை வருமானம்
  • தற்போதைய மீன் மகசூழ் ஆண்டிற்கு 0.9 டன் /சதுர மீட்டர் தொடக்கம் 1.8 டன் /சதுர மீட்டரினை இரட்டிப்பாக்குதல் (2.02 மில்லி மீட்டர் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் இருந்து இந்தியாவின் மீன் மகசூல் ஆண்டிற்கு 2 டன் /சதுர கிலோ மீட்டராகும்)
  • மீன்வளப் பொருட்கள் மற்றும் மீன்வளர்ப்பின் தரத்தை வளர்த்தல்.
  • நீடித்த தன்மை மற்றும் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்த மீன்வள மூலங்களை நிர்வகித்தல்.

  • செயற்திட்டம்

    1. துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் 1,337 மீன் பிடி கிராமங்களின் கல்வி, கழிப்பறைகள், நீர் மற்றும் மின்சாரம் போன்ற சமூக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.
    2. நிகழ்நேர தரவுகளுக்காக புவிசார் தொழில்நுட்பத்துடன் கூடிய மீன் பிடி வலயத்தை அடையாளம் காண இலங்கை கடற் தகவல் மையத்தை நிறுவுதல்.
      • கடல் வெப்பநிலை,குளோரோபில் வடிவங்கள், அலையின் வேகம் மற்றும் திசையின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் பிடிப்பதன் மூலம் மீன்கள் பல காணக் கூடிய சாத்தியமான மீன்பிடி வலயங்களை (PFZ) குறித்து ஆலோசனை கூறுதல்
      • இந்த மையத்தின் மூலம் பேரழிவு வலயங்கள் / பாதிப்பிற்குள்ளான பகுதிகளுக்கு அதிக அலை மற்றும் காற்று எச்சரிக்கைகள் வழங்குதல்.
    3. நிகழ்நேர வானிலை முன்னறிவிப்பு முறையை நிறுவுதல்.
    4. தற்போதைய / புதிய திட்டங்களுடன் கடற்கரையில் உள்ள அனைத்து மீன்பிடி துறைமுகங்கள் / மீன் தரையிறக்கும் மையங்களின் திறனை நவீனப்படுத்துதல் மற்றும் அதிகரித்தல்.
    5. மீன் பிடி கிராமங்களை கொண்ட 14 மாவட்டங்களுக்கும் மீன் மொத்த சந்தைகளை அறிமுகப்படுத்துதல்.
    6. மீன்களின் புத்துணர்ச்சியைப் பாதுகாக்க உள்நாட்டு போக்குவரத்து நோக்கங்களுக்காக அடுக்கக் கூடிய கடல் உணவு நடமாடும் முறையை வழ ங்குதல்.
      உள்நாட்டு தொழில் நிலையானது அடுக்கக் கூடிய கடல் உணவு நடமாடும் முறைக்கு வரி மற்றும் ஊநுளுளு இல் விலக்களித்தல்.
      பொதுவாக இதுபோன்ற முறைகள் 165 மணிநேரம் வரை உறைந்திருக்கும் மீன்களை கொண்டிருக்கும்.
    7. கப்பல்களில் மீன்களை உறைய வைக்க நடமாடும் குளிர் சேமிப்பு கொள்கலன்களை அறிமுகப்படுத்துதல்.
    8. ஒவ்வொரு மீன்பிடி கிராமத்திலும் மீன் விலை மற்றும் பங்கு கிடைக்கும் தன்மை பற்றிய நிகழ்நேர தகவல்களை உள்ளடக்கிய ஒரு விண்ணப்பத்தை வழங்குதல்.
    9. மீன் உபகரணங்கள் மீதான இறக்குமதி வரியினை விலக்குதல்.
    10. மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு காப்பீட்டு திட்டத்தை வழங்குதல்.
    11. மீனவர் நல வசதிகளை அதிகரிக்கும் முயற்சியை நிறுவுதல்.

      இந்த முயற்சியின் மூலம் இறந்த மீனவர்கள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குதல்.

    12. இலவசமாக கிராமப்புற நிதி ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
    13. பொது-தனியார் கூட்டாண்மை மூலம் சந்தை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்; பண்ணைக்கு சந்தை வீதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நாடு தழுவிய திட்டத்தின் மூலம் மீன் பொருட்கள் பிரிவுடன் கூடுதல் சந்தைகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல்.
    14. ஆதரவு வழங்கும் நிறுவனங்களின் பங்களிப்பை வரையறுக்கவும் - தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தேவையான மாற்றங்களை எளிதாக்க இந்த நிறுவனங்களுக்குள் அர்ப்ணிப்புடன் கூடிய நிபுணர்களுடன் பணிபுரிதல்.
    15. மீன்களின் அளவு மற்றும் மீனவர்களுக்கு கண்டுபிடிக்கக்கூடிய தன்மையைக் கண்டறிய ஒரு விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தல்.
    16. சிற்பி சாகுபடியை சமூக வருமானம் ஈட்டும் திட்டமாக விரிவுப்படுத்துதல்.
    17. இலங்கையில் திறந்த கடல் மீனவளர்ப்பை அதிகரித்தல், இதற்கு ஒரு எடுத்துக்காட்டு தற்போது திருகோணமலையில் கூண்டு வடிவிலான விவசாய முறைமை.
    18. விவசாயிகள் / தொழில் முனைவோருக்கு மீன் வளர்ப்பிற்கான ஊக்கத்தொகைகளுடன் நீண்ட கால குத்தகை ஒப்பந்தங்களில் நீரில் மூழ்கிய பகுதிகள் / இறந்த ஆறுகளை வழங்குதல்.
    19. மேலதிக மீன் பண்ணைகளை உருவாக்குதல் மற்றும் புதிய மற்றும் உப்பு நீரில் கட்டப்பட்டு இருக்கும் மீன் பண்ணைகளை தீவரப்படுத்துதல்.

      புதிய மீன் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் கடன் திட்டங்களை நிறுவுதல்.

    20. தற்போதுள்ள தொழில் கல்வி கல்லூரிகளில் மீன் வளர்ப்பு குறித்த தொழி;லநுட்ப, தொழில் கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்துதல். மேலதிகமாக,

      மீன் பிடித் துறையில் ஈடுபடுவோருக்கு பின்வரும் பகுதிகளில் தொழில் பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்துதல்.

      • மீன் விவசாயி பயற்சி – நன்னீர் மீன் வளர்ப்பு
      • சிறிய இயந்திரங்கள் கொள்கைகள் பயற்சி – தொழில்நுட்ப சேவைகள்.
      • சமூக அடிப்படையிலான இஸ்ப்ராட் விவசாயிகள் மற்றும் பெண்கள் விற்பனையாளர்களுக்கான நிதிக் கல்வியறிவு (பண முகாமைத்தவம்)
      • அறுவடைக்கு பிந்திய மீன்வளத்துக்கான பயிற்சி உட்பட்ட பயிற்சி.
      • ஆழ்நீர் “மீன் திரட்டு சாதனம்” குறித்த பயிற்சி.
      • கடற்பாசி விவசாய பயிற்சி.
    21. மீனவர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்புகளை அரசு அமுல்ப்படுத்தல். பதிவேற்ற வேண்டிய பயிற்சி ஒளிநாடாக்கள் மற்றும் மின் கற்றல் தளம் என்பன உருவாக்கப்பட வேண்டும்.
    22. கடற்கரைக்கு அப்பாலான மீன்பிடி.

    23. ஒரு கையடக்கத் தொலைப்பேசி அப்லிகேஷனை பயன்பாட்டை அறிமுகப்படுத்துதல், அங்கு மீன் பண்ணை உரிமையாளர்கள் நோய்களைக் கண்டறிந்து, மீன்களின் நோய்களுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் கண்டறியலாம்.
    24. அனைத்து மாவட்டங்களிலும் நன்னீர் குஞ்சுப் பொறிப்பகங்களை நிறுவுதல் மற்றும் தற்போதுள்ள அனைத்து நன்னீர் குஞ்சுப் பொறிப்பகங்களையும் மேம்படுத்துதல்.
      நடந்துக் கொண்டிருக்கும் திட்டங்களானவை பின்வருகின்றன,
      • மீன்வளர்ப்பு மேம்பாட்டு மையம் நிறுவுதல், செவனப்பிட்டி, பொலன்னறுவை.
      • மீன்வளர்ப்பு மேம்பாட்டு மையம் நிறுவுதல், முறுத்தவெல
      • நண்டு நகரக் கட்டம் 1 நிறுவுதல், கல்முல்ல, ஹம்பந்தோட்ட
      • நண்டு நகரக் கட்டம் 2 நிறுவுதல், ரகாவ, ஹம்பந்தோட்ட
      • நண்டு நகரக் கட்டம் 3 நிறுவுதல், மணற்கேனி, மட்டக்களப்பு
      • அலங்கார மீன் வளர்ப்பு மையம் நிறுவுதல், செவனப்பிட்டிய
      • அலங்கார கடல் மீன் வளர்ப்பு மையம் நிறுவுதல், பங்கதெனியா
      • மரபணு மேம்பாட்டு மையம் நிறுவுதல், தம்புள்ள
      • மீன்வளர்ப்பு மேம்பாட்டு மையம் நிறுவுதல், முறுத்தவெல
      • நன்னீர் இறால் குஞ்சிப் பொரிப்பகங்கள் நிறுவுதல், திருகோணமலை.
      • மீன்வளர்ப்பு மேம்பாட்டு மையம் நிறுவுதல், உடவலவ
      • குடல் வெள்ளரி குஞ்சிப பொரிப்பகங்கள் நிறுவுதல், மன்னார்.
      • துற்போதுள்ள மையங்களில் (இங்கின்யாகல, தம்புள்ள, கலாவெவ மற்றும் உடவலவ – திலபியா) வசதிகளை புதுப்பித்தல் மற்றும் விரிவுப்படுத்தல்.
    25. துற்போதுள்ள மையங்களில் (இங்கின்யாகல, தம்புள்ள, கலாவெவ மற்றும் உடவலவ – திலபியா) வசதிகளை புதுப்பித்தல் மற்றும் விரிவுப்படுத்தல்.
    26. நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் கொல்லைப்புற குஞ்சுப் பொரிப்பகங்களி;ல் வளர்ப்பது கிராமப்புற சமூகத்திற்கு ஒரு குடிசைத் தொழிலாக பிரபலப்படுத்தப்பட்டது..
    27. அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் பயிற்சி மையங்களை விரிவுப்படுத்துதல்.

      தற்போது ரம்படகல்லவில் உள்ள அலங்கார மீன் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி மையத்தைப் மீன் வளர்ப்பு மற்றும் முகாமைத்துவத்துக்கான பயிற்சி வீடியோக்களை அறிமுகப்படுத்துதல்.