இலக்குகள்

To increase GDP per capita from

USD 4,000 to USD 12,000

தற்போது இலங்கையில்
(மாணவர்களுக்கான சதவிகிதம் 19 – 23 வருட)
2020 – 2025 இற்கான இலக்கு
(மாணவர்ச் சேர்க்கை)
தடவைகளின் அதிகரிப்பு அல்லது குறைப்பு இலக்கை அடைவதற்கு
அரசாங்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 7% 25,200 16.67% 60,000 அதிகரிப்பு 2.38 தடவைகளால்
உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 4.1% 15,000 29.23% 105,228 அதிகரிப்பு 7.1 தடவைகளால்
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை. 4.1% 15,000 4.1% 15,000
தொழில் பயிற்சி நெறியை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை (2017) 22% 79,200 40% 144,000 அதிகரிப்பு 1.8 தடவைகளால்
வேலைப் படையணிக்காக பயிற்றப்படாத வேலையாட்களின் பங்களிப்பு (வீட்டு வேலையாள், நாட் கூலி போன்றன) 62.8% 225,600 10% 36,000 குறைப்பு 6.28 தடவைகளால்
வருடாந்த மாணவர்கள். 360,000 360,000
  • அரசாங்க பல்கலைக்கழக பட்டதாரிகளின் எண்ணிக்கையை 25,200 இலிருந்து 60,000 ஆக அதிகரித்தல் மற்றும் உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களின் பட்டதாரிகள் எண்ணிக்கையை 15,000 இலிருந்து 105,228 ஆக அதிகரித்தல்.
  • வருடாந்த மொத்த பல்கலைகழக பட்டதாரிகளின் எண்ணிக்கையை 180,000 இலிருந்து 360,000 ஆக அதிகரித்தல்.

செயற் திட்டம்

  1. அரசாங்க பல்கலைக்கழகங்களில் மாணவர் உள்ளெடுக்கும் திறனை 30,000 இலிருந்து 60,000 ஆக அதிகரித்தல்.
  2. குறைந்த தர மதிப்பெண் கொண்ட பகுதிகளை மேம்படுத்துவதன் மூலம் தற்போதுள்ள பல்கலைக்கழக தர வரிசைகளை மேம்படுத்துதல்

    உலக உயர் கல்வி பல்கலைக்கழக தரவரிசைகளின் தரப்படுத்தல் தடவைகள

    • கற்பித்தல் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல்
    • தொழில்த்துறை வருமானத்தை அதிகரித்தல்
    • சர்வதேச மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
    • வெளியீடுகள் மற்றும் மேற்கோள்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
  3. அனைத்து பட்டப்படிப்புக்களுக்கும் வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதத்தினை வழங்குதல். வேலை வாய்ப்பு சந்தையில் கேள்வியில்லாத அனைத்து பட்டப்படிப்புக்களையும் நிறுத்துதல்.
  4. பல்கலைக்கழக பட்டப்படிப்புக்களை தொழிற் சந்தையிலும் எதிர்கால தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுத் தரக் கூடியவாறான கல்வி அமைப்பைக் கொண்டு மறுசீரமைத்தல்.
  5. அரச மருத்துவக் கல்லூரியின் கொள்திறனை 1,300 இலிருந்து 2,000 ஆக அதிகரித்தல் மற்றும் பல் வைத்திய துறைக்கான உள்ளீர்ப்பை அதிகப்படுத்தல். தனியார் மருத்துவப் பல்கலைக்கழங்களை தடை செய்தல்.
  6. அரச மற்றும் பகுதியளவு அரசாங்க பல்கலைக்கழகங்களில் ஒன்லைன் தளத்தின் ஊடாக விரிவுரைகள் கிடைக்கக் கூடியதாக இருத்தலை உறுதிப்படுத்தல்.
  7. இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு மாணவர் கடன் வசதிகளையும் சிறப்பாக திறமையை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு உதவித் தொகையையும் வழங்குதல்.
  8. வெளிநாடுகளில் மேலதிக கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்கு அரசாங்க பல்கலைக்கழகங்களில் IELTS போன்ற மொழிப் பரீட்சை வசதிகளை வழங்குதல்.
  9. அரச பல்கலைக்கழக நூலகங்களில் இருக்கும் புத்தகங்களை மின் நூலக தளத்திற்கு மேம்படுத்துதல்.
    சர்வதேச மென்புத்தகங்களை வாங்கி, E-நூலகம் வழியாக அனைத்து மாணவர்களுக்கும் அவற்றை இலவசமாக வழங்குதல்.
  10. நவீன சாதனங்களைக் கொண்டு அரசாங்க பல்கலைக்கழகங்களின் ஆய்வு கூடங்களை புதுப்பித்தல்.
  11. ஒன்லைன் ஒதுக்கீடு முறைமையின் மூலம் அரசாங்க பல்கலைக்கழகத்தின் ஆய்வு வசதிகளை திறந்து கொடுத்தல்.
  12. தற்போதுள்ள அனைத்து அரசு பல்கலைக்கழக விடுதிகளையும் முறையான சுகாதார வசதிகளுடன் மேம்படுத்தல்.
  13. அனைத்து அரச பல்கலைக்கழச சிற்றூண்டிச் சாலைகளிலும் தரமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல்.
  14. அனைத்து வகையான பகிடி வதைகளையும் அரச பல்கலைக்கழகங்களில் தடை செய்தல
    2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை 1980 மாணவர்கள் பகிடி வதைக் காரணமாக அரச பல்பலைக்கழகங்களை விட்டு விலகியுள்ளனர்.
  15. உயர் கல்விக்கு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT இனை அமுல்படுத்துதல்.
    கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் VAT விகிதங்கள் என்பன அடுத்த 25 வருடங்களுக்கு மருத்துவ கல்லூரிகள் தவிர்ந்த தனியார், தனியார் சர்வதேச பல்பலைக்கழங்களை கட்டுவதற்கு உத்தரவாதமளிக்கும்.
  16. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவினுள் சர்வதேச தரம் வாய்ந்த 5 பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு அரசாங்க மென் கடன் வழங்குதல்.
    வருடாந்தம் 50,000 சர்வதேச மாணவர்களுக்கு கல்வி சுற்றுலாவை பற்றி ஊக்கமளித்தல்.
  17. மாவட்ட ரீதியான வர்த்தக முயற்சியின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தனியார் அல்லது பகுதியளவு அரசாங்க பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க ஊக்கமளித்தல்.
  18. வருடாந்தம் 105,228 மாணவர்கள் என்ற அடிப்படையில் உயர் தரம் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1.2 மில்லின் வட்டியில்லாத கடன் தொகையினை அவர்கள் தங்கள் உயர் கல்வியை தனியார் பல்கலைக்கழகங்களில் தொடரும் பொருட்டு அறிமுகப்படுத்தி வழங்குதல்.
  19. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்த வகையில் STEM தொடர்பான பிரிவு மற்றும் பிரிவிற்கு பிரிவு உருவாக்குதல்.
  20. வெளியீடு வீதத்தை அதிகரிக்கும் முகமாக, விரிவுரையாளர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக அவர்களின் ஆராய்ச்சியின் தரம் மற்றும் அவர்கள் வெளியிட்ட வெளியீடுகள் மற்றும் ஆவணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஊக்கத் திட்டங்களை உருவாக்குதல்.
  21. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் பங்காளராக செயற்பட்டு மாணவர்களை, விரிவுரையாளர்களை, ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை மற்றும் நிபுணர்களை பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்வதற்கு ஊக்கமளித்தல்.
  22. தனியார் மற்றும் பொது பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களை இளமானி மற்றும் முதுமானி பட்டப்படிப்புக்களுக்காக இணைத்துக் கொள்வதை அதிகரித்தல்.
  23. அனைத்து எழுத்துரு புத்தகங்களையும் பிரைலி முறைமைக்கு மாற்றுவதுடன் இலவசமாக கேள் மற்றும் பார்வை தகவு உதவிகளை செய்தல்.
  24. இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களது தாய் மொழிக்கு மேலதிகமாக சிங்களம்,ஆங்கிலம், தமிழ் மொழியினை கற்பதற்கு ஒன்லைன் மூலமான மொழி கற்கை வசதிகளை செய்து கொடுத்தல்.
  25. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தொழில் வழிகாட்டலை வழங்குதல்.
  26. தொழில்நுட்பஃவிஞ்ஞான மாணவர்களை தொழில் முயற்சியாண்மையாளர் ஆக்குவதங்கு தேவையான அறிவுறைகள் மற்றும் முயற்சிகைளை வழங்கி ஊக்கப்படுத்துதல்.
  27. மாணவர்களை அவர்களது கல்வித் தகைமைக்கு ஏற்றாற் போல் பயிற்சி பட்டறைகளில் இணைவதற்கு தேவையான உதவிகளை செய்தல்.
  28. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மனநல ஆலோசனையை வழங்குதல்.
  29. பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தனிப்பட்ட சீர்ப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு ஒளிநாடாக்களுடன் ஒரு தளத்தை தொடங்குதல்.